தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லதா மங்கேஷ்கர் மறைவு; திரைத்துறையினர் இரங்கல்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவால் இன்று (பிப்.6) காலை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

celebrities condolonce over lata maneshkar
லதா மங்கேஷ்கர்

By

Published : Feb 6, 2022, 1:11 PM IST

இந்தியாவின் ’நைட்டிங் கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் பல மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கர் இன்று (பிப். 6) காலை காலமானார். அவரது இழப்பிற்கு திரைத்துறைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான்:

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், “அன்பு, மரியாதை, பிரார்த்தனைகள்” எனத் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து:

கவிஞர் வைரமுத்து காணொலி வாயிலாக, "இசைக்குயில் பறந்து விட்டது, இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்து விட்டது. உழைக்கும் மக்கள் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பாடகி ஷ்ரேயா கோஷல்:

பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், லதா மங்கேஷ்கர் இழப்பு குறித்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியுற்றதாகவும், அவரது குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா:

ஒரு சகாப்தம் முடிவடைந்துவிட்டதாக நடிகை தமன்னா இரங்கலில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமார்:

நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், “லதா மங்கேஷ்கரின் மறைவு இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு. அவரின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா அமைதிக் கொள்ளட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்:

“இந்தியா தனது நைட்டிங் கேலை இழந்து விட்டது” என நடிகை காஜல் அகர்வால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கானக் குயில் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details