புதுச்சேரி:தீபாவளி திரை விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் 14 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஆர்வம் கொண்ட ரசிகர்கள் திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்தனர்.
காலையில் நடந்த கொடூரம்
முதல் காட்சி காலை 4.30 மணிக்குத் திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அண்ணா சாலையில் உள்ள ராஜா திரையரங்கில் 'அண்ணாத்த' காலை காட்சி திரையிடப்பட்டது.
அப்போது 11.15 மணியளவில் திரையரங்கு ஓரத்தில் பால் சீலிங் இடிந்து விழுந்தது. இதனால், படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்து வெளியேறினர். படம் முடியும் தருவாயில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், ரசிகர்கள் பாதுகாப்பான இடத்தில் நின்று பார்த்துச் சென்றனர்.
ரசிகர்கள் வெளியேறிய பிறகு இடத்தை சுத்தம் செய்து விட்டு, கட்டடத்தின் தன்மையை உறுதி செய்தபின் அடுத்த காட்சி திரையிடப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: அதிகாலையில் 'அண்ணாத்த' அதிரடி; மும்பையில் முதல் ஷோவுக்கு குவிந்த ரசிகர்கள்