முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், இருநாள் பயணமாக உத்தரப் பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். இதற்கிடையே, கோரக்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற குரு கோரக்நாத் கோயிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார். அப்போது, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
கோயிலில் வழிபாடு மேற்கொண்ட முப்படைத் தலைமைத் தளபதி! - கோரக்பூர்
லக்னோ: இருநாள் பயணமாக உத்தரப் பிரதேசத்திற்குச் சென்றுள்ள முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கோரக்பூரில் உள்ள கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
முன்னதாக, ஜிஆர்டி வளாகத்தில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தயார்நிலை குறித்து அவர் ஆய்வுமேற்கொண்டார். நேற்று, கோரக்நாத் கோயில் அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டுவரும் மஹாரானா பிரதாப் கல்விக் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராவத், ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு, ராவத் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கோயிலில், பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, ராமர் கோயில் பதித்த வெள்ளி நாணயம் ராவத்திற்கு வழங்கப்பட்டது.