இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் லஷ்மன் சிங் ராவத் (பிபின் ராவத்) 1958ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி பிறந்தார்.
தனது இளமைக்கால கல்வியை உத்தரகாண்டில் உள்ள இந்து ஹர்வாலி ராஜ்புத் பள்ளியில் பயின்றார். இந்திய ராணுவ அலுவலர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். தொடர்ந்து ராணுவத்தில் முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளார்.
பபின் ராவத் 1978ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி கோர்க்கா ரைபிள்ஸின் 5ஆவது பட்டாலியன் பிரிவில் நியமிக்கப்பட்டார்.உயர் மட்ட அளவிலான போர்களில் அதிக அனுபம் கொண்ட ராவத் கிளர்ச்சி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 10 ஆண்டுகளை செலவிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் மேஜராக பணிபுரிந்தார். ஒரு கர்னலாக, அவர் கிபித்துவில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக கிழக்குத் துறையில் 5ஆவது பட்டாலியன் 11 கோர்க்கா ரைபிள்ஸ் என்ற தனது பட்டாலியனுக்குக் கட்டளையிட்டார்.
பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், சோபோரில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் 5 பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார்.
மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிறகு, ராவத் 19ஆவது காலாட்படை பிரிவின் (உரி) தளபதியாக பொறுப்பேற்றார். ஒரு லெப்டினன்ட் ஜெனரலாக, அவர் புனேவில் உள்ள தெற்கு இராணுவத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்பு திமாபூரில் தலைமையகமாக இருந்த III கார்ப்ஸ்க்கு கட்டளையிடும் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
ராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற பிறகு, ராவத் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று தெற்கு தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, 2016 செப்டம்பர் 1ஆம் தேதி ராணுவ துணைத் தளபதி பதவியை ஏற்றார்.
தொடர்ந்து, ராணுவத்தின் 27ஆவது தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டார். பீல்ட் மார்ஷல், சாம் மானெக்ஷா மற்றும் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் ஆகியோருக்குப் பிறகு, கோர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த மூன்றாவது அதிகாரி இவர்.
நேபாள ராணுவத்தின் கெளரவ ஜெனரலும் இவர் ஆவார். இந்திய மற்றும் நேபாள ராணுவங்களுக்கு இடையே, அவர்களின் நெருங்கிய மற்றும் சிறப்புமிக்க ராணுவ உறவுகளை குறிக்கும் வகையில், பரஸ்பர தலைவர்களுக்கு கெளரவ ஜெனரல் பதவியை வழங்குவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இந்தப் பதவியை வகித்தவரும் பிபின் ராவத் ஆவார்.