தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி: யானை லட்சுமி மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி! - யானை லட்சுமி மயங்கி விழுந்த சிசிடிவி

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நடைப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 30, 2022, 4:21 PM IST

புதுச்சேரி:புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் பெண் யானை லட்சுமி (32) இன்று (நவ.30) காலை காமாட்சி அம்மன் கோயில் வீதியில் சென்றபோது, திடீரென மயங்கி கீழே விழுந்து துடி, துடிக்க உயிரிழந்தது. இந்நிலையில் நடை பயிற்சியின்போது, யானை லட்சுமி உயிரிழந்தபோது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதனிடையே உயிரிழந்த யானைக்கு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கிரேன் மூலம் யானை லாரியில் வைக்கப்பட்டு, அம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயில் முன்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் யானை லட்சுமி மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி..

உயிரிழந்த கோயில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் என்.ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். லட்சுமி யானையின் உடல் வாழைக்குளம் பகுதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை... பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details