தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொடூரக்கொலை: வெளியான சிசிடிவி - bangalore murder

பெங்களூரு: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகருமான தாரிஹள்ளி வெங்கடேஷ் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்.

murder
கொலை

By

Published : Mar 1, 2021, 8:17 PM IST

கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டத்தின் ஹோஸ்பேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்குள் 48 வயதான வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ், கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஆவார். பட்டப்பகலில் அரங்கேறிய கொலை சம்பவம், வழக்கறிஞர்கள், காவல் துறையினர், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, ஹோஸ்பேட் நீதிமன்றத்திற்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், வளாகத்தில் பணியிலிருந்த வழக்கறிஞர் வெங்கடேஷை கழுத்திலும், மார்பிலும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் உயிரிழந்தார். இதைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் தெறித்து ஓடினர். இருப்பினும், காவல் துறையினர் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.

வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ்

விசாரணையில், கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் மனோஜ் என்பதும், இவர் இறந்த வழக்கறிஞரின் உறவினர்தான் என்பது தெரியவந்தது.

சொத்துக்காகக் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது, இந்தக் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details