பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிட்டி மார்க்கெட் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய ததவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த லாட்ஜிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லாட்ஜின் அறைகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வாடகைக்கு இருந்துள்ளனர். ஆனால், பெண்கள் யாரும் இருக்கவில்லை. இருப்பினும் போலீசார் குளியலறை, சமயலறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் சோதனையிட்டனர். அப்போது சமயலறையின் சுவற்றில் துளையிடப்பட்டு வாயில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் அதற்குள் நுழைந்த போலீசார் உள்ளே 7 இளம்பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், லாட்ஜின் 4ஆவது மாடியில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் வரும் நேரத்தில் அவர்களை மறைத்துவைக்க குடிநீர் வசதியுடன் கூடிய 2 ரகசிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பெண்களை மகளிர் விடுயில் வைத்துள்ளோம். விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:Audio Leak... பாலியல் தொழில் தடையின்றி நடக்க லஞ்சம் வாங்கிய காவல்துறை அலுவலர்