தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 17, 2021, 11:34 AM IST

Updated : Jun 17, 2021, 12:45 PM IST

ETV Bharat / bharat

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது இப்படி தான்: சிபிஎஸ்இ விளக்கம்

cbse
சிபிஎஸ்இ

11:27 June 17

பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பான பொது நல வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 ஜுன் 3ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிப்பெண் மதிப்பீடு முறையை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ-க்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று(ஜுன்.17), பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. 

  • 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.
  • 11ஆம் வகுப்பு பாடங்களில் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்
  • 12ஆம் வகுப்பு பாடங்களில் 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்
  • செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்

மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு, தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ  பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்ச்சையை கிளப்பிய திருவள்ளுவர் புகைப்படம்: காணாமல் போன காவி உடை!

Last Updated : Jun 17, 2021, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details