தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு! - 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

CBSE releases date sheet for term 1 board exams
CBSE releases date sheet for term 1 board exams

By

Published : Oct 18, 2021, 10:36 PM IST

டெல்லி: 10, 12ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 30ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் பருவத் தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1 முதல் 22ஆம் தேதி வரை பருவத்தேர்வு நடைபெறுகிறது. நடப்புக் கல்வியாண்டில் மாநிலக் கல்வியில் பயிலும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இச்சூழலில், சிபிஎஸ்இ 10, 12ஆம் முதல் பருவத் தேர்வுகளுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை
12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை | பக்கம் 1
12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை | பக்கம் 2

இதையும் படிங்க:9 - 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details