தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆராய புதிய ஆய்வு குழு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆராய புதிய ஆய்வு குழு ஒன்றை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

CBSE
CBSE

By

Published : Jun 4, 2021, 10:21 PM IST

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது. தேர்வு நடைபெறாத சூழலில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான ஆயத்த பணிகளில் ஒன்றிய கல்வி அமைச்சகம் இறங்கியுள்ளது.

அதன்படி, கல்வி அமைச்சக இணை செயலர் விபின் குமார் தலைமையில் குழு ஒன்றை சிபிஎஸ்இ அமைத்துள்ளது. இந்தக் குழு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை கண்டறிந்து 10 நாள்களில் அறிக்கை சமர்பிக்கும் எனக் கூறியுள்ளது.

மதிப்பெண் வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும், ஆய்வு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் அடுத்த சில நாள்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தடுப்பூசி திட்டத்தில் அமெரிக்காவை முந்திய இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details