தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியாகின.

சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ

By

Published : Jul 30, 2021, 3:50 PM IST

Updated : Jul 30, 2021, 3:57 PM IST

டெல்லி: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியாகின. மதிப்பெண் விவரங்களை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவுகள் குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in மற்றும் digilocker.gov.in E இணையத்திலும் தரவுகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இதற்கு மாணவர்களின் பட்டியல் எண் (ரோல்) அவசியம். மேலும், சிபிஎஸ்இ பாஸ் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், இடம்பெயர்வு சான்றிதழ்கள் டிஜிலாக்கர் சேவையில் கிடைக்கும்.

இதற்கு 'கல்வி' பிரிவின்கீழ் உள்ள 'சிபிஎஸ்இ'-ஐ கிளிக் செய்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் ஆவணங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

70,004 மாணவர்கள் 95 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 11.5 விழுக்காடு மாணவர்கள் 90-95 விழுக்காடு வரை மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:தன்பாத் நீதிபதி கொலை- உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

Last Updated : Jul 30, 2021, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details