டெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் மே மாதம் 15ஆம் தேதி வரை சிபிஎஸ்இ +2 தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 22) வெளியாகியுள்ளது.
cbseresults.nic.in, result.cese.nic.inஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைக் காணலாம். இதில், மாணவர்கள் தங்களது பதிவு எண், பள்ளிக்குறியீடு, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ +2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சிபிஎஸ்இ +2 தேர்வில் 98.82 விழுக்காடு தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், 98.16 விழுக்காடு தேர்ச்சியுடன் பெங்களூரு இரண்டாம் இடத்திலும், 97.79 விழுக்காடு தேர்ச்சியுடன் சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவுகளை அறியலாம். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டதால், கல்லூரியில் மாணவர் சேர்க்கை தாமதமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் பணிக்குத் திரும்பும் முதலமைச்சர் - நிதித்துறை, செஸ் ஒலிம்பியாட் குறித்து ஆலோசனை!