கொல்கத்தா: கால்நடை கடத்தல், சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் புகார்கள் தொடர்பாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் வினய் மிஷ்ராவுக்கு சொந்தமான மூன்று இடங்களில் சிபிஐ அலுவலர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
ஊழல் புகாரைத் தொடர்ந்து வினய் மிஷ்ரா தலைமறைவாகவுள்ள நிலையில், அவருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அண்டை நாடுகளுக்கு கால்நடைகளை கடத்தியதாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், தலைமறைவாக உள்ள அவரை கடந்த சில வாரமாக அலுவலர்கள் தேடி வருகின்றனர்.