டெல்லி:திருநெல்வேலி மாவட்டம் திருவெம்பாலபுரத்தில், மணல் ஆலை அமைப்பதற்காக, மத்திய சுகாதாரத் துறை இணை இயக்குநர் நீரஜ் கட்கரிக்கு 2012ஆம் ஆண்டு வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் நான்கு லட்சம் ரூபாய் கையூட்டுக் கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான, வழக்கு 2019 மார்ச் 1ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டது. கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற வழக்கின் விசாரணை ஜனவரி 19ஆம் தேதி நிறைவடைந்தது.
தெடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி வாசிக்கப்பட்ட தீர்ப்பில் நீரஜ் கட்கரி முதல் குற்றவாளியாகவும், வைகுண்டராஜன் இரண்டாவது குற்றவாளியாகவும், கையூட்டுக் கொடுக்க உதவிய வைகுண்டராஜனின் உதவியாளர் சுப்புலட்சுமி மூன்றாம் குற்றவாளியாகவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
நேற்று, தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் குற்றவாளியான நீரஜ் கட்கரிக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபாரதம், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம், கையூட்டுக் கொடுக்க உதவிய வைகுண்டராஜனின் உதவியாளர் சுப்புலட்சுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம், மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. மேலும், வைகுண்டராஜனின் நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மௌனம் கலைப்பாரா சசிகலா? அடுத்த கட்ட நகர்வு என்ன...