கொல்கத்தா: மேற்கு வங்க மாடுகள் கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மோண்டலை சிபிஐ அலுவலர்கள் இன்று (ஆகஸ்ட் 11) அவரது வீட்டில் கைது செய்தனர். இதுகுறித்து சிபிஐ தரப்பில், மாடுகள் கடத்தல் வழக்கில் அனுப்ரதா மோண்டலுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மோண்டல் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு நெருக்கமானவர் கைது - அனுப்ரதா மோண்டல்
மாடுகள் கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முதலமைச்சர் மம்தாவுக்கு நெருமானவருமான அனுப்ரதா மோண்டல் சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
இதன்காரணமாக அவரை கைது செய்துள்ளோம். இதனிடையே அவர் தனது உடல்நிலை மோசமாக இருப்பதால் 14 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தியதாக எங்களிடம் தெரிவித்தார். இதனால் ஓய்வை பரிந்துரைத்த போல்பூர் மருத்துவமனை மருத்துவரிடம் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. அதோடு இந்த வழக்கு தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்ரதா மோண்டல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மும்பையில் எஃகு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சோதனை... 13 மணி நேரமாக எண்ணப்பட்ட பணம்...