டெல்லி:குழந்தை ஆபாசப் படங்களை பார்ப்பதும், அவற்றைப் பகிர்வதும் குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தை ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களது பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவற்றில் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் குழந்தை ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றி விற்பனை செய்ததாகவும், இணையத்தில் பதிவேற்றம் செய்ய சில பொருள்களை வாங்கியதாகவும் இருவரை சிபிஐ கைது செய்தது.
இவர்கள் மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ், பிணையில் வெளியில் வர இயலாத வண்ணம் வழக்குப் பதிவு செய்துள்ளது.