டெல்லி:காவிரியிலில் 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு அரசிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி இந்த மாதம் 37.9 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்த நிலையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த நிலையில் கர்நாடக அரசு தண்ணீர் வழங்கவில்லை என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக அரசு 9000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு முறையாக பின்பற்றுவது இல்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இருவர் உயிரிழப்பு - அரசுக்கு ஒத்துழைக்க பினராயி விஜயன் வேண்டுகோள்!
தமிழ்நாட்டிற்கு இந்த மாதம் கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக அரசு மீது காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது. இதனையடுத்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளிக்காட்சி மூலமாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு தரப்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டு வருவதாகவும், மேலும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் அதிப்தி அளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஓழுங்காற்று குழு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், " மழை இல்லை அதனால் தண்ணீர் இல்லை, அனைவரும் மழை பொழிய இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பெங்களூரில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு.. என்ன காரணம்? போலீசார் தீவிர விசாரணை!