டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தின்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கான 50 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஏற்கனவே கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்டு 27ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தர வேண்டிய நீரின் அளவு 80.37 டி.எம்.சி ஆகும். ஆனால் கர்நாடகா ஆகஸ்ட் 27ம் தேதி வரை 30.17 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. மீதம் உள்ள 50 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு