டெல்லி:காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14ஆவது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் சார்பில், பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கர்நடகா முறையாக காவிரி நீரை வழங்கவில்லை, செப்டம்பர் 23ஆம் தேதி வரையிலான 37.3 டிஎம்சி காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது.