தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பண்டோரா பேப்பர்ஸ் - விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பண்டோரா பேப்பர்ஸ் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Pandora Papers
Pandora Papers

By

Published : Oct 4, 2021, 8:56 PM IST

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு(International Consortium of Investigative Journalists) பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் புலனாய்வு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

பலநூறு பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், உலகத் தலைவர்களின் அறியப்படாத பண மோசடிகள், சட்டவிரோத பரிவர்த்தனைகள், வெளிநாடுகளில் பினாமி சொத்துகள் ஆகிய அதிர்ச்சிக்குரிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

அறிக்கையில் 91 நாடுகளைச் சேர்ந்த 330-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும் இடம்பெற்றுள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்ட 380 இந்தியர்களின் பெயர்கள் இடைபெற்றுள்ளன.

பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புகார்கள் குறித்து சட்டப்படி உண்மையை வெளிகொண்டுவரும் நடவடிக்கையில் விசாரணை அமைப்புகள் ஈடுபடவுள்ளன.

இது குறித்து சர்வதேச நாடுகளின் விசாரணை அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் திரட்டப்படும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ளும்' எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Pandora Papers: இந்திய பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்த பண்டோரா ஆவணங்கள்

ABOUT THE AUTHOR

...view details