புதுச்சேரி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் அருண் கூறுகையில் ’’புதுச்சேரியில் கரோனா நோய் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதாக புகார்கள் வருகின்றன.
கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் வழக்குப்பதிவு - சுகாதாரத் துறை செயலர் - pondy news
புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து கரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து 500 அங்கன்வாடி பணியாளர்கள் பணியில் உள்ளனர் என்றும், கடந்த 2 வாரத்தில் மட்டும் கரோனா தொற்று எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்துள்ளது.மேலும், கரோனா தடுப்பூசி, தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங். எம்பி ராகுலுக்கு கரோனா!