தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டி - வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்! - வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்

சண்டிகர் : பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டியை ஒட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொகாலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர் கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டி - வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்!
முதலமைச்சர் கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டி - வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்!

By

Published : Jan 2, 2021, 8:53 PM IST

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு 10 லட்சம் டாலர்கள் பரிசாக வழங்கப்படுமென அண்மையில் செக்டர் 66-67 கிராசிங் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டி - வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்!

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மொகாலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக, சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டிகளை ஒட்டியவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க :முத்தலாக் தடைச் சட்டம்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன் பிணை வழங்க தடையேதும் இல்லை - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details