லக்னோ (உத்தரப்பிரதேசம்):சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேரில் போலி ட்விட்டர் கணக்கினைத் தொடங்கி, அவதூறுகளைப் பரப்பிய அடையாளம் தெரியாதவர்களைக் கைது செய்யக்கோரி காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேரில் போலி ட்விட்டர் கணக்கினைத் தொடங்கி, வெறுப்பு கருத்துகளைப் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நரேஷ் உத்தம் காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை கிடைத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட புகார்
இவ்விவகாரத்தில் கடந்த 25ஆம் தேதி மாலை கெளதம்பள்ளி காவல் நிலையத்தில் நரேஷ் உத்தம் அளித்தப் புகாரின்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.