தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் மீது வழக்கு! - Case filed

நாக்பூரில் 19 வயது இளைஞரை, இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஆவேஷ் மிர்சா மற்றும் அனில் உய்கே ஆகியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த  இரண்டு பேர் மீது வழக்கு
இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் மீது வழக்கு

By

Published : May 30, 2022, 10:47 PM IST

நாக்பூர்: 19 வயது இளைஞரை, இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் அளித்தப் புகார் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மீதும் நந்தன்வன் காவல் நிலையத்தில் குற்றவியல் சட்டம் 377 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவேஷ் மிர்சா மற்றும் அனில் உய்கே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஆவேஷ் மிர்சா மற்றும் அனில் உய்கே ஆகியோருடன், பாதிக்கப்பட்ட இளைஞரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி உள்ளனர். நந்தன்வன் பகுதியில் உள்ள மகப்பேறு வார்டுக்கு அருகில் உள்ள முட்புதரில் தங்களை சந்திக்க பாதிக்கப்பட்ட இளைஞரை அழைத்துள்ளனர். இளைஞர் அங்கு வந்த பிறகு, ஆவேஷ் மிர்சா மற்றும் அனில் உய்கே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்தப்புகாரின் பேரில் இருவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:தகாத உறவை கண்டித்த கணவரை வாழைக்கு உரமாக்கிய மனைவி

ABOUT THE AUTHOR

...view details