கங்கையில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து - மீட்பு பணி தீவிரம்... கடிகர்: பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிடையே கங்கை நதியில் பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணியில் திலிப் பில்ட்கான் கம்பெனி (DBL) என்ற கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் சரக்கு கப்பலில் சிமெண்ட் லாரிகள் ஏற்றப்பட்டு பீகார், ஜார்க்கண்ட் எல்லை அருகே கங்கை நதியில் கப்பல் சென்றுகொண்டு இருந்தது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு கப்பல் கங்கையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகாலையில் விபத்து நேர்ந்த நிலையில், கப்பலில் நிறுத்தப்பட்டு இருந்த 6 சரக்கு லாரிகளில் மூன்று லாரிகள் கங்கை நதியில் கவிழ்ந்த நீரில் மூழ்கின.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த இரு மாநில போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். கங்கையில் மூழ்கிய லாரிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காணாமல் போன இரு ஓட்டுநர்களை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கப்பலில் இருந்த சரக்கு லாரியின் டயர் வெடித்து சிதறியதால் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு கப்பல் கங்கை நதியில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:’துனிஷாவை மதமாற்றம் செய்ய ஷீசன் தூண்டினார்’ - வனிதா ஷர்மா பகீர்