ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் அல்காபுரியிலுள்ள டாடா ஷோரூமிற்கு, வாடிக்கையாளர் ஒருவர், முன்பதிவு செய்திருந்த காரை டெலிவரி எடுக்க வந்துள்ளார். அப்போது, மேல் தளத்தில் வைத்து காரின் சிறப்பம்சங்கள் குறித்து விற்பனையாளர்கள் விளக்கிக் கொண்டிருந்தனர்.
முதல் தளத்திலிருந்து கீழே பாய்ந்த கார்
வாகனத்தில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர், காரின் கியரை டிரைவ் மோடுக்கு மாற்றி ஆக்சிலேட்டரைத் தவறாக அழுத்தியுள்ளார். அவ்வளவுதான், கார் வேகமாகச் சென்று முதல் தளத்திலிருந்து தலைக்குப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.