டெல்லி: தென்மேற்கு டெல்லி நேரு பிளேஸ் பகுதியில் கல்லூரி மாணவரை முட்டித் தூக்கி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி ஐஐடி கல்லூரியில் அஸ்ரப் நவாஸ் கான் மற்றும் அன்குர் சுக்லா ஆகியோர் பிஎச்.டி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை இருவரும் உணவு அருந்துவதற்காக எஸ்.டி.ஏ. மார்கெட் பகுதிக்கு சென்று உள்ளனர். இருவரும் சாலையைக் கடக்க முயன்ற நிலையில் அதிவேகமாக வந்த கார் திடீரென இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் அஸ்ரப், மற்றும் அன்குர் சுக்லா படுகயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சைப் பலனளிக்காமல் அஸ்ரப் பரிதாபமாக உயிரிழந்தார். அன்குர் சுக்லா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.