தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊர்வலத்தில் கார் புகுந்து 4 பேர் உயிரிழப்பு; தசரா விழாவில் கொடூரம் - சத்தீஸ்கரில் கார் மோதி நால்வர் உயிரிழப்பு

தசரா பண்டிகை ஊர்வலத்தில் அதிவேகத்தில் புகுந்த கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

Car ploughs into Dushera procession many dead
Car ploughs into Dushera procession many dead

By

Published : Oct 15, 2021, 10:51 PM IST

ஜாஷ்பூர்: சத்தீஸ்கர் ஜாஷ்பூர் நகரில் உள்ள பதல்கான் பகுதியில் இன்று (அக். 15) தசரா விழாவின் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது

அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கும்பலுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காரில் கஞ்சா

அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், சிகிச்சை பெற்றுவந்த நால்வர் உயிரிழந்தனர்.

ஊர்வலத்தில் புகுந்த கார்... பரபரப்பு காணொலி

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் பலரும் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அங்கிருந்த மக்கள் கோபத்தில் அந்த காரை துரத்தி சென்று, காருக்குத் தீ வைத்தனர். அந்த காரில் அதிகளவில் கஞ்சா இருந்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறை - பொதுமக்கள் மோதல்

இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஊர்வலத்தில் இருந்தோர், பதல்கான் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காவலர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், காவலர்களுக்கும், பொதுமக்கள் சிறு மோதல் ஏற்பட்டது. தங்களின் செயல்கள் பதிவாகிவருவதை கண்ட பொதுமக்களின் ஒரு பிரிவினர், செய்தியாளர்களின் கேமராக்களை பறித்தனர்.

இதையும் படிங்க: சிங்கு எல்லையில் இளைஞர் கொடூரக் கொலை

ABOUT THE AUTHOR

...view details