பெங்களூரு: ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை “ஒய் எஸ் ஜெ” (YSJ) என கார் நம்பர் ப்ளேட்டில் பொறித்த அவரின் தீவிர ரசிகரை பெங்களூரு போக்குவரத்து காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
நம்பர் ப்ளேட்டால் முதலமைச்சரின் தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோதனை! - ஒய் எஸ் ஜெ
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை நம்பர் ப்ளேட்டில் பொறித்த ரசிகருக்கு பெங்களூரு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ysj number plate
கார் உரிமையாளரான முதலமைச்சரின் தீவிர ரசிகரின் வண்டி எண் ‘451’ தான். ஆனால் அதை ‘ஒய் எஸ் ஜெ’ என மாற்றி புது வடிவம் கொடுத்திருக்கிறார். போக்குவரத்து காவல் துறையினர் இந்த செயலுக்கு அபராதம் விதித்ததுடன், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
தற்போது மாநகரில் டிசிபி சாந்தராஜ் உத்தரவின் பேரில், டிசைன் டிசைனாக நம்பர் ப்ளேட்டுகளை வைத்து சுற்றித்திரியும் வாகன உரிமையாளர்களை காவல் துறையினர் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.