பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் தனிநபரின் புகைப்படம் மற்றும் காணொலிகளை பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, தனிபரின் புகைப்படங்கள், காணொலிகளை அவரது அனுமதி இல்லாமல் ட்விட்டரில் பதிவிடக்கூடாது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தனியுரிமை தகவல் கொள்கையின் கீழ் இந்த புது விதி அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே முகவரி, தொலைத்தொடர்பு எண், இமெயில் போன்ற தனிநபர் விவரங்களை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புது விதி மூலம் தனியுரிமை கொள்கையை விரிவுபடுத்தியுள்ளது.