உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் நேற்று (அக்.03) நடந்த விவசாயிகளின் போராட்டத்தின்போது பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு விவசாயிகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ்ஸின் கார், விவசாயிகள் மீது ஏறியதில், ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆஷிஸ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தலாமா?
இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறையின் எதிரொலியாக விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி கிசான் மகா பஞ்சாயத் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர் மற்றும் சிடி ரவிக்குமார் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் விசாரணையில் ஒரு குறிப்பிட்ட விவகாரம் இருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
விவசாயிகளுக்கு கண்டனம்
இதில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என கோரினார். மேலும், லக்கிம்பூர் போராட்டத்தின் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, "லக்கிம்பூர் கேரியில் நேற்று நடந்த நிகழ்வுகளால் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து வரும் அக்டோபர் 21ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:சக்கர நாற்காலியில் எல்இடி டிவி அமைத்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர் - பெற்றோர்கள் பாராட்டு