டெல்லி:பாஜக அரசுக்கு எதிராக பலமான அணியை உருவாக்கும் நோக்கில் கனையா குமார் இன்று (செப். 28) காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், குஜராத் வட்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிகழ்விற்கு பிறகு கனையா குமார், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சிந்தாந்த ரீதியில் இணைந்துள்ளேன்
இதையடுத்து, ஜிக்னேஷ் மேவானி பேசுகையில், "நான் சுயேச்சை எம்.எல்.ஏவாக இருக்கிறேன். தற்போது காங்கிரஸில் இணைந்தால் என்னால் எம்.எல்.ஏவாக தொடர முடியாது. அதனால், சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் கட்சியில் ஒரு அங்கமாக இணைந்துள்ளேன். வரும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய கனையா குமார்,"காங்கிரஸ் ஒரு பெரிய கப்பல் போன்றது. அதை காப்பாற்றினால் பலரின் லட்சியங்கள், அண்ணல் காந்தி வலியுறுத்தும் ஒற்றுமைத்துவம், பகத் சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவம், இவையனைத்தும் பாதுகாக்கப்படும்.