புதுச்சேரி: உழவர்கரை கம்பன் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சோதனை நடத்திய ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் 2.5 லட்சம் மதிப்புள்ள 1,700 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கஞ்சா விற்கும் கும்பலின் தலைவன் ராமராஜிடம் அது வாங்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராமராஜனைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்துக் கடந்த 23ஆம் தேதி முதல் ஆந்திராவில் தேடிவந்தனர். நக்கல்கள் நிறைந்த பகுதியான தாமராடு கிராமத்தில் ராமராஜ் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் நடவடிக்கை அங்கு சென்ற காவல் துறையினர் ராமராஜனை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, ராமராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : சொகுசு கார் மோதி காவலர் உயிரிழப்பு: ஷாக்கிங் சிசிடிவி