தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொலைக்காட்சி, இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு கெடுபிடி விதிக்கும் கர்நாடக அரசு!

பெங்களூரு: தொலைக்காட்சி, இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்காகதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா
கர்நாடகா

By

Published : Feb 15, 2021, 7:02 PM IST

கர்நாடக மாநிலம் பெல்காவியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அம்மாநில உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி, "வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டையை (பிபிஎல்) வைத்து கொள்ள சில கட்டுப்பாடுகள் உள்ளன.

ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம், மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி, பிரிட்ஜ் போன்றவற்றை வைத்திருக்க கூடாது. இவற்றை வைத்திருந்தால் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறினால், அதனை நாங்கள் செய்வோம். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மேல் இருந்தால், பிபிஎல் அட்டையை மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பு ஒப்படைக்க வேண்டும்" என்றார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், பெங்களூர், மைசூரு, தும்குரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான யு. டி காதர் கூறுகையில், "நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த போதே, இந்த பிரச்னை வந்தது.

கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி

ஆனால், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என கருதி, விதிமுறைகளை தளர்வுப்படுத்த வேண்டாம் என முடிவு எடுத்தோம். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் அவர்களின் குடும்ப அட்டை பறிக்கப்படுகிறது. இது ஏழைகளுக்கு எதிரான அரசு" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details