மனித உடலில் அதிகமாக காணப்படும் நியூட்ரோபில்ஸ் எனும் வெள்ளையணுக்கள், கரோனாவுக்கு காரணமான நோய் கிருமிகளை அழித்தொழிக்கிறது என கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தேசிய அறிவியல் சங்கத்தின் முன்னெடுப்பு காரணமாக இது ஆன்லைனில் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளது. ஆன்டிபாடிகள் எப்படி சுவாசப் பாதையில் உள்ள வைரஸை செயலிழக்கச் செய்கிறது என்ற புரிதல் வர இது வழிவகுக்கிறது. இதனால் தடுப்பூசி தயாரிப்பில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.