தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2020, 7:27 PM IST

ETV Bharat / bharat

பட்டாசுகளை தடை செய்யலாமா...வேண்டாமா? - கருத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

டெல்லி: பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளுக்காக பட்டாசுகளை தடைசெய்யலாமா; வேண்டாமா என்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சில அமைப்புகளிடம் கருத்து கேட்டுள்ளது.

National Green Tribunal
National Green Tribunal

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, வரும் 7ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரை, பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளுக்காக பட்டாசுகளை தடை செய்யலாமா; வேண்டாமா என்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சில அமைப்புகளிடம் கருத்து கேட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாநில அரசு, டெல்லி காவல் துறை, ஹரியானா மாநில அரசு, உத்தரப்பிரதேச மாநில அரசு, ராஜஸ்தான் மாநில அரசு போன்றவற்றிற்கு பட்டாசுகளை தடை செய்வது குறித்து, தங்களின் நிலைப்பாடு என்ன எனக்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு வேதிப்பொருட்களை அதிகம் பயன்படுத்தி தயாரிக்கும் பட்டாசுகளை உச்ச நீதிமன்றம் தடைசெய்து, பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதித்தது. இந்நிலையில் இந்தாண்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே வாங்கவும், விற்கவும் அனுமதிக்கப்படுவதாக டெல்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அம்மாநில மக்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார். இதனிடையே பட்டாசுகளை தடை செய்வது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ”பட்டாசு ஆலைகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” - வலியுறுத்தும் அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details