டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், பிரதமர் மோடியை தேசப்பிதா என்று கூறினார். மகாத்மா காந்தி முந்தைய காலத்தின் தேசத்தின் தந்தை என்றும், பிரதமர் மோடி நவீன இந்தியாவின் தேசத்தந்தை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அம்ருதா ஃபட்னாவிஸின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்டப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்று கூறுவது மோடிக்கு தான் அவமானம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், "பாஜகவினர் இந்தியாவை பழைய இந்தியா என்றும் புதிய இந்தியா என்றும் பிரித்துவிட்டனர். பழைய இந்தியாவுக்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றும், புதிய இந்தியாவின் தந்தை மோடி என்றும் கூறுகிறார்கள். தற்போது புதிய இந்தியாவில், பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பயங்கரவாதம் போன்ற பேய்கள் தலைதூக்கி ஆடுகின்றன. இந்த புதிய இந்தியாவுக்கு மோடியை தந்தை ஆக்குவது, அவருக்குதான் அவமானம்.