ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் பதவி வகிக்கிறார். இவரின் அமைச்சரவையில் இன்று புதிதாக 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
இதில் ஹேமாராம் சௌத்ரி, ரமேஷ் மீனா, விஷ்வேந்திர சிங் ஆகியோர் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2020ஆம் ஆண்டு சச்சின் பைலட்-க்கு ஆதரவு தெரிவித்து ஹேமாராம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மீனா உள்ளிட்டோரும் அசோக் கெலாட்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு தற்போது அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குடா-வுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.