புவனேஸ்வர்: 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் விதமாக அமைச்சரவையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் லத்திகா பிரதான் உள்ளிட்டோர் சேர்க்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரும் 20ஆம் தேதி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அதனால், அவரது பயணத்திற்கு முன்னதாக, இன்று (ஜூன் 5) புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.