டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (டிச.30) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிவித்தார்.
எஸ்டோனியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் இந்திய தூதரகம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
எஸ்டோனியா, பராகுவே உள்ளிட்ட மூன்று நாடுகளில் இந்திய தூதரகத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
அப்போது, எஸ்டோனியா, பராகுவே, டொமினிகன் குடியரசு ஆகிய மூன்று நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் அந்நாட்டுடனான இந்திய வர்த்தக மற்றும் கலாசார உறவுகள் மேலும் வலுப்பெறும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:பிகாருக்கு 'டிஜிட்டல் இந்தியா விருது' வழங்கி கௌரவித்த குடியரசுத் தலைவர்