தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

10 மடங்கு வேகம் பெறப்போகும் இணைய சேவை...! 5ஜி ஏலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் - நரேந்திர மோடி

5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலத்தை ஜூலை மாத இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஓப்புதல் வழங்கியுள்ளது.

5ஜி
5ஜி

By

Published : Jun 15, 2022, 1:00 PM IST

Updated : Jun 15, 2022, 2:16 PM IST

டெல்லி:கடந்தபிப்ரவரி மாதம் நடந்த பட்ஜெட் தாக்கலின் போது 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இதற்கான ஏலத்தை ஜூலை மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் மேற்க்கொண்டு வருகிறது. தற்போது மொத்தம் 72097.85 MHz 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஏலத்தின் மொத்த காலம் 20 ஆண்டுகள் ஆகும்.

மேலும் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5ஜி சேவை தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4ஜி சேவையை விட பல மடங்கு அதிவேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரெப்போ வட்டி வீதம் உயர்வு!

Last Updated : Jun 15, 2022, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details