பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, "தற்சார்பு இந்தியா தொலைநோக்குத் திட்டத்தை மேலும், தீவிரப்படுத்தவும், மின்னணு சாதனங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய குவிமையமாக இந்தியாவை நிலை நிறுத்தவும் நீடித்து உழைக்கும் செமி கண்டக்டர் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலை மேம்படுத்த விரிவானத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில்துறையில் 4.0 டிஜிட்டல் மாற்றத்தின் அடுத்தக் கட்டத்திற்கு செமி கண்டக்டர்களும் காட்சிப்படுத்தும் சாதனங்களும். நவீன மின்னணு துறைக்கு அடித்தளம் அமைப்பவையாகும். இது அதிகப்படியான முதலீடுகள், அதிகபட்ச பொறுப்பு போன்றவற்றைக் கொண்டதாகும்.