ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்த அறிவிப்பை இன்று (அக்.21) செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படியானது 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
இதற்காக அரசுக்கு ரூ.9,488.75 கோடி கூடுதல் செலவு ஏற்படும் எனத் தெரிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடப்பாண்டு தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைத்திருந்த அகவிலைப்படி உயர்வு அறிவித்தது. அதேவேளை, தமிழ்நாடு அரசு நிதிநிலையை காரணம் காட்டி தனது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நடப்பாண்டு வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:TOP 10 HIGHLIGHTS: 100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ் மைல்கல்