டெல்லி: இதுகுறித்து மத்திய அமைச்சரவைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோதுமை அல்லது கோதுமை மாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள்/தடையிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கை திருத்த முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று (ஆக 25) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல், கோதுமை மாவு ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அனுமதிக்கும். இது கோதுமை மாவின் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்தும். குறிப்பாக நாட்டின் நலிந்த பிரிவினரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும். முன்னதாக கோதுமை மாவு ஏற்றுமதி மீது எந்தவித தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக் கூடாது என்ற கொள்கை இருந்தது.