தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் அமெரிக்க பெண் முன்பு கேப் ஓட்டுநர் சுயஇன்பம் - பெண் முன்பு கேப் ஓட்டுநர் சுயஇன்பம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமெரிக்க பெண் முன்பு சுயஇன்பம் செய்த கேப் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் அமெரிக்க பெண்ணின் முன்பு கேப் ஓட்டுநர் சுயஇன்பம்
மும்பையில் அமெரிக்க பெண்ணின் முன்பு கேப் ஓட்டுநர் சுயஇன்பம்

By

Published : Nov 29, 2022, 3:45 PM IST

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரியில் அமெரிக்க பெண் முன்பு சுயஇன்பம் செய்ததாக கேப் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் 2 நாள்கள் காவலில் வைத்துள்ளனர். இவரது பெயர் யோகேந்திர உபாத்யாய். இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தேரி போலீசார் கூறுகையில், "அமெரிக்க பெண் ஒருவர் நேற்று(நவம்பர் 28) மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வந்தார். தன்னுடைய விடுதிக்கு செல்வதற்காக தனியார் கேப் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.

இந்த பயணத்தின் போது கேப் ஓட்டுநர் இவர் முன்பே சுயஇன்பம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கூச்சலிட ஆரம்பித்தார். அப்போது சக வாகனவோட்டிகள் கவனித்து, அந்த காரை நிறுத்தினர். கேப் ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த அமெரிக்க பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்... நடிகர் அனுபம் கெர் பதிலடி...

ABOUT THE AUTHOR

...view details