அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற பல்வேறு மாநில இடைத்தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் பல்வேறு தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக ஒரு மக்களவைத் தொகுதியையும், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
கர்நாடக மாநிலத்தில் சிந்திகி தொகுதியை பாஜகவும், ஹங்கல் தொகுதியை காங்கிரசும் கைப்பற்றியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இரு தொகுதிகளை ஆளும் பாஜகவும், ஒரு தொகுதியை எதிர்க்கட்சியான காங்கிரசும் வெற்றிபெற்றுள்ளது.
தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு வெற்றியும் காங்கிரஸ் தொண்டரின் கடுமையான வெற்றியாகும். எனவே, தைரியமாகத் தொடர்ந்து போராடுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:காங்கிரசிலிருந்து அமரீந்தர் ராஜினாமா - புதிய கட்சி பெயர் அறிவிப்பு