நாட்டின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனமான SAIL இன் முன்னாள் தலைவர் வி கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன்26) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.
தமிழ்நாட்டில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி உலக அளவில் தொழில்துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாகவும், பொதுத்துறை நிறுவனங்களில் உறுதியான தலைமையை தேசம் இழந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:BHEL மற்றும் மாருதி நிறுவன முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்