தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பத்தாவது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை! - மும்பை கொலாபா

மும்பையில் தொழிலதிபர் ஒருவர் ஹோட்டலின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Businessman
Businessman

By

Published : Dec 4, 2022, 10:41 PM IST

மும்பை: மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த தொழிலதிபரான ஷாருக்(58) ஐக்கிய அரபு எமிரேட்சில் வணிகம் செய்து வந்ததாக தெரிகிறது. இவர் தனது தாயாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அண்மையில் இந்தியா வந்தார். இவர், மும்பை கொலாபாவில் உள்ள தாஜ் வெலிங்டன் மியூஸ் ஹோட்டலில் தனது குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், ஷாருக் நேற்று(டிச.3) ஹோட்டலின் 10வது மாடியில் இருந்து குதித்தார். ஐந்தாவது மாடியில் விழுந்த நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் தான் செய்துவந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்து ஷாருக் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் ஏதும் அளிக்கவில்லை. அதேநேரம் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை - கல்லூரி முதல்வர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details