தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2022, 7:33 PM IST

ETV Bharat / bharat

ஜம்முவில் 150 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 25 பயணிகளுடன் சென்ற பேருந்து 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஜம்முவில் பரபரப்பு
ஜம்முவில் பரபரப்பு

ஜம்மு-காஷ்மீர் (உதம்பூர்):ஜம்மு காஷ்மீர், உதம்பூர் மாவட்டத்தில் 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு JK14D 5050 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து (ஜூலை 7) சென்றது. ராம்நகர் தாலுகா, கியா கிராமம் அருகே பேருந்து சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து சென்ற மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஐந்து பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிர் சேதம் குறித்து தகவல் தெரியவில்லை. எனினும் விபத்தின் தன்மையைப் பொறுத்தவரை பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சப்படுகிறது" என்று தெரிவித்தார்.

150 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

விபத்து குறித்து ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "உதம்பூர், ராம்நகர் பகுதியில் ஏற்பட்ட விபத்து செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அலுவலர்களுடன் தொலைபேசி வாயிலாக நிலவரங்களை கேட்டு வருகிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது " என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இடுக்கி மாவட்டத்தில் தொடர் கனமழை - 5 பேர் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details