தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Thrissur Bus Accident: திருச்சூரில் தனியாா் பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்! - Kerala Thrissur Bus Accident 40 Injured

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளனர்.

Kerala Accident
Kerala Accident

By

Published : Aug 18, 2023, 2:33 PM IST

திருச்சூர் (கேரளா):கேரள மாநிலம்திருச்சூர் மாவட்டம் கனிமங்கலம் பகுதியில் சென்று கொண்டு இருந்த தனியாா் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 40 நபா்கள் காயமடைந்துள்ளதாக திருச்சூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (ஆகஸ்ட் 18) காலை தனியாா் பேருந்து 50 பயணிகளுடன் திருச்சூர் மாவட்டம் கனிமங்கலம் பகுதி வழியாக செல்லும்போது, தன் முன்பு சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து நடைபெற்றதாகவும், மற்றும் சிலர் சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் பேருந்து ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

தனியாா் பேருந்து விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்து விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு சிகிச்சைக்காக சர்த்துள்ளனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி தப்பினர். மேலும், காயமடைந்த 40 நபர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்த சிலர், திருச்சூர் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருச்சூர் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர்.

சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது தன் முன்பு சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து நடைபெற்றதா உள்ளிட்ட கோணங்களில் திருச்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தரமற்ற சாலையால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம்

ABOUT THE AUTHOR

...view details